நேரக்கட்டுப்பாட்டை மீறி சென்னையில் பட்டாசு வெடித்த 163 பேர் மீது வழக்குப்பதிவு
Diwali
Tamil Nadu Police
By Thahir
சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகையின் போது நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 163 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி நாளான்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது.
காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், சென்னையில் நேரக் கட்டுப்பாடு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.