இந்தியாவில் மீண்டும் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்..!

Youtube
By Thahir Apr 26, 2022 01:58 AM GMT
Report

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இரண்டாவது முறையாக மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின் தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் 10 இந்திய யூடியூப் சேனல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 6 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களின் வீடியோக்களுக்கு, 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் யூடியூப் சேனல்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.