இளவரசருடன் 16 வயதில் திருமணம் - 17 ஆண்டுகளுக்குப் பின் பேசிய மாடல் அழகி!

Malaysia Indonesia Marriage
By Sumathi Jan 06, 2026 03:23 PM GMT
Report

மனோஹரா ஒடெலியா தனது அதிர்ச்சிகரமான திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்தோனேசிய மாடல்

மலேசிய இளவரசர் தெங்கு ஃபக்ரி, கடந்த 2008ல் இந்தோனேசிய-அமெரிக்க மாடலான மனோகரா ஒடெலியாவை திருமணம் செய்துகொண்டார். அப்போது மனோகராவுக்கு வயது 16.

இளவரசருடன் 16 வயதில் திருமணம் - 17 ஆண்டுகளுக்குப் பின் பேசிய மாடல் அழகி! | 16 Year Old Model Married Malaysian Prince

அந்த திருமணம் நடந்த ஒரு வருடம் கழித்து தனது கணவரால் தினசரி பாலியல் துஷ்பிரயேகம் மற்றும் உடல் ரீதியான தண்டனைகள் அனுபவித்ததாகக் கூறி மலேசியாவை விட்டு மனோகரா வெளியேறினார்.

2009ல், ஓர் அரச குடும்பப் பயணத்தின்போது, ​​மனோகரா சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்றார்.

உலகமே 2026-ல்.. ஆனால் இந்த நாடு மட்டும் 2018-ல் - பின்னணி என்ன?

உலகமே 2026-ல்.. ஆனால் இந்த நாடு மட்டும் 2018-ல் - பின்னணி என்ன?

16 வயதில் திருமணம்

இந்நிலையில், இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், ’2008இல் நடந்த தனது திருமணம் சம்மதத்துடனோ அல்லது சட்டப்படியோ நடக்கவில்லை. அது ஒரு கட்டாயத் திருமணம். அந்த நேரத்தில், நான் ஒரு சிறுமியாக இருந்தேன், கட்டாயம் மற்றும் சுதந்திரமின்மை என்ற சூழ்நிலையில் இருந்தேன்.

இளவரசருடன் 16 வயதில் திருமணம் - 17 ஆண்டுகளுக்குப் பின் பேசிய மாடல் அழகி! | 16 Year Old Model Married Malaysian Prince

அதாவது, எனக்கு உண்மையான தேர்வு செய்யும் வாய்ப்போ அல்லது சம்மதம் அளிக்கும் தகுதியோ இல்லை. பல ஆண்டுகளாக, நான் கட்டுரைகளிலும் தலைப்புச் செய்திகளிலும் முன்னாள் மனைவி என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறேன்.

இந்த விளக்கம் தவறானது மற்றும் தவறாக வழிநடத்துகிறது என்பதை மரியாதையுடன் தெளிவுபடுத்துவதற்காக இதை நான் எழுதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.