16 வயது சிறுமியுடன் சிக்கிய இளைஞர் : என்ன நடந்தது?
விழுப்புரம் அருகே 16 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞரை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வீ.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த 23 வயதான மோகன், அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்கத்து கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அவரை ஏமாற்றி கடந்த 2ஆம் தேதி சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
இதையடுத்து மகளை காணவில்லை என அப்பெண்ணின் பெற்றோர் கடந்த 5ம் தேதி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த சிறுமி, மோகன் ராஜ் என்பவருடன் வீட்டை விட்டு சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில் மோகன்ராஜ் வேலைக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டு சென்னைக்கு சென்றதும், அவரின் செல்போன் எண் சென்னையில் சிக்னல் காண்பிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோகன்ராஜை போலீசார் சென்னையில் வைத்து கையும் களவுமாக கைது செய்ததுடன் சிறுமியின் பத்திரமாக மீட்டனர்.
மேலும், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோகன்ராஜ் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கை போக்ஸோ வழக்காக மாற்றிய போலீசார், மோகன் ராஜை அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.