16 வயது மாணவிக்கு திடீர் மாரடைப்பு - பள்ளியிலேயே உயிரிழப்பு!
11ஆம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
மத்தியப் பிரதேசம், இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விரிந்தா திரிபாதி(16), தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு வழக்கம் போல சென்றார். அங்கு குடியரசு தின விழா ஒத்திகை நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற விரிந்தா, ஒத்திகை முடிந்து வகுப்பு சென்றார்.

இந்நிலையில், சுமார் 12 மணி அளவில் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். பதறிப்போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டதே மாணவியின் மரணத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு
சம்பவ தினத்தன்று இந்தூரில் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்துள்ளது. மாணவி மெலிதான விளையாட்டு பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு குடியரசு தின விழா ஒத்திகை செய்துள்ளார்.மேலும், அந்த நேரத்தில் அவர் சில நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டுள்ளார்.
மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட இவை காரணிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவியின் சொந்த ஊர் ஊஜ்ஜைன். அவரின் தந்தைக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதால் அவரது தாய் மாமா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில்,இந்துரைச் சேர்ந்த முஸ்கான் என்ற சமூக தொண்டு நிறுவனம் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு கண் தானத்திற்காக கோரிக்கை வைத்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் அவரது கண்களை தானம் செய்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை IBC Tamil
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil