கள்ளக்காதலனுக்கு 16 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு விருந்தாக்கிய கொடூரத் தாய் - அதிர்ச்சி சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுனிதா. இத்தம்பதிக்கு 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயதான மகள் உள்ளார். ராமசாமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு முதுகு தண்டுவட பிரச்சினையால் வீட்டில் படுத்த படுக்கையாகி விட்டார். இதனையடுத்து ராமசாமி வீட்டில் வறுமை வாட்டியது.
வறுமையால் சுனிதா, பர்னிச்சர் கடையில் வேலைக்காக சென்றுள்ளார். பர்னிச்சர் கடை நடத்தி வரும் ராஜையனுக்கும், சுனிதாவுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில், கடந்த 2 முன்பு சுனிதாவின் 16 வயது மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை போனில் தொடர்பு கொண்டு, என்னை ஒருவர் கடந்த 3 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்கிறார் என்றும், என்னை அவரிடமிருந்து காப்பாற்றுங்கள், தற்போது நான் என் தோழி வீட்டில் பாதுகாப்புக்காக தங்கி இருக்கிறேன் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த குழந்தைகள் நல அலுவலர்கள் அச்சிறுமியை சந்திக்க தோழியில் வீட்டிற்கு வந்தனர். அப்போது, அச்சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அச்சிறுமி கூறுகையில், என் அம்மா வேலை பார்க்கும் பர்னிச்சர் கடை உரிமையாளர் ராஜையனுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இதனால், அடிக்கடி அந்த நபர் எங்கள் வீட்டிற்கு வாரம்தோறும் வருவார். கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி ஞாயிற்று கிழமை வீட்டில் தனியாக நான் இருந்தேன். அப்போது, வீட்டிற்கு வந்த ராஜையன் என்னை அறைக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
வீட்டிற்கு வந்த அம்மாவிடம் நான் இதுபற்றி கூறினேன். அப்போது என் அம்மா, "அங்கிளுக்கு உன்மேல் ஆசை அட்ஜெஸ் பண்ணிக்கோ" என்று கூறிவிட்டார். இதை யாரிடமும் சொல்லாதே, மீறி சொன்னால் உன்னை அடித்துவிடுவேன் என்று என் அம்மா என்னை மிரட்டினார்.
இதனையடுத்து கடந்த 3 மாதங்களாக ஞாயிற்று கிழமை தோறும் வீட்டிற்கு வரும் ராஜையன் என்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். வெளியில் சொல்ல முடியாமல் பயத்திலேயே இருந்த நான் என் தோழியிடம் கூறினேன். என் தோழியின் உதவியால் உங்களுக்கு தொடர்பு கொண்டு கூறினேன் என்று அழுதுகொண்டே கூறினாள்.
இதன் பின்பு, அச்சிறுமியை மீட்ட அதிகாரிகள், ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அச்சிறுமியை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை பதிவு செய்த போலீசார், ராஜையனையும், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் சுனிதாவையும் போக்ஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்த இருவரையும், நாகர்கோவில் மகிழா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.