சிறுமிகளை கடத்தி வைத்து அந்த மாதிரி படம் - என்ஜீனியரின் லீலையால் கேள்விக்குறியான பலரது வாழ்க்கை!
உத்திரபிரதேசத்தில், சிறுவர் சிறுமிகளை வைத்து பலான படமெடுத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நீர்ப்பாசனத் துறையில் பொறியாளராக இருந்த 30 வயதான நபர் ஒருவர் சமூக ஊடகத்தில் டார்க் வெப்சைட் என ஒரு வலைதளத்தை நடத்தி வருகிறார்.
இதில் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளை வைத்து பலான படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த தகவல் அறிந்த போலீசார், அவரை பல நாட்களாக கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவரது வலைதளத்தை ஆய்வு செய்த போது, பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
அதில் 16 வயதுக்குட்பட்ட பல பள்ளி மாணவிகளை கடத்தி சென்று இந்த மாதிரியான வீடியோக்கள் எடுத்து பல நாடுகளுக்கு அனுப்பி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அவரின் டார்க் வெப்சைட் வலைதளத்தை முடக்கியுள்ளனர்.