பள்ளியிலேயே மாணவன் வெட்டி படுகொலை – சக மாணவனின் வெறிச்செயலால் பரபரப்பு!
சிங்கப்பூரில் 13 வயது மாணவன் ஒருவன் சக மாணவனால் பள்ளி வளாகத்திற்குள் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பிரபல ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன் தினம் வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவர்கள் கழிவறைக்கு சென்றுள்ளனர், அப்போது அங்கு ஒரு மாணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பள்ளிக்கூடத்தில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதே பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவன் நான் தான் கோடாரியால் வெட்டி கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.