புறா என்றால் ரொம்ப பிடிக்கும்! தான் வளர்த்த புறாவாலேயே உயிரிழந்த சிறுவன்!!
பரமக்குடியில் புறா பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிறிஸ்தவ தெருவில் அருள் - தயாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 16 வயதான மகன் டென்னிஸ் தனியார்பள்ளியில் படித்து வருகிறார்.
இவருக்கு புறா அதிகளவு பிடிக்கும் என்பதால் தனது வீட்டிலேயே புறா வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் புறா பக்கத்து வீட்டின் மாடிக்கு சென்றதால் அதை பிடிக்க சென்றுள்ளார்.
அந்த புறாவோ மின்சார கம்பிக்கு அருகில் இருந்ததால் அதை எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.