யூரோ கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு 16 அணிகள் முன்னேற்றம்

Euro Cup 2021
By Petchi Avudaiappan Jun 24, 2021 10:51 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கால்பந்து
Report

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்ட யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

யூரோ கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு 16 அணிகள் முன்னேற்றம் | 16 Teams Moves To Next Round In Euro Cup

இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற நிலையில், ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் வீதம் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 

இந்த லீக் சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற 2 அணிகள் வீதம் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.ஏ பிரிவில் இருந்து இத்தாலி, வேல்ஸ் அணிகளும். பி பிரிவில் இருந்து பெல்ஜியல், டென்மார்க் அணிகளும். சி பிரிவில் இருந்து நெதர்லாந்து, ஆஸ்டிரியா அணிகளும், டி பிரிவில் இருந்து இங்கிலாந்து, குரோசியா அணிகளும். இ பிரிவில் இருந்து ஸ்வீடன், ஸ்பெயின் அணிகளும், எஃப் பிரிவில் இருந்து பிரான்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளுக்குள் நுழைந்துள்ளன.

அதேபோல லீக் சுற்றுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நான்கு அணிகளும் அவை, ஏ பிரிவில் இருந்து சுவிட்சர்லாந்து அணியும், சி பிரிவில் இருந்து உக்ரைன் அணியும், டி பிரிவில் இருந்து செக் குடியரசு அணியும் எப் பிரிவில் இருந்து போர்ச்சுகல் அணியும் அடுத்த சுற்றுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன.

இதையடுத்து 12 + 4 என மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கின்றன.