16 ரவுடிகளின் பட்டியல் தயார்: இன்னும் ஒரு வாரத்தில் கைது
சென்னையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் 16 ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் காவல் அதிகாரிகள் சென்னை பெருநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகமாகி கொரோனா தொற்று பாதித்து விடக்கூடாது என்பதற்காக கடையில் இருந்து சுமார் 50 மீட்டருக்குள் பேரிகார்டுகள் அமைத்துள்ளதாக கூறினார்.
காக்கா தோப்பு பாலாஜி கைது குறித்து பேசிய அவர், சென்னையில்
16 ரவுடிகளின் பட்டியலை எடுத்துள்ளோம் என்றும், ஒரு வாரத்திற்குள் அவர்களை கைது செய்ய உள்ளதாக தெரிவித்தார்.