கனடாவில் தீவிரமாக பரவும் குரங்கு காய்ச்சல் - 16 பேர் பாதிப்பு..!
உலகம் முழுவதும் குரங்கு காய்ச்சல் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் குரங்கு காய்ச்சலால் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொது சுகாதார முகமை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடுமையாக பாதித்த கொரோன பெருந்தொற்று இன்னும் மக்களை அச்சுறுதி வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பெரும்பாலோனோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தொற்று நோய் புதிதாக பரவுவதால் உலக நாடுகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
குரங்கு காய்ச்சல் மேற்கத்திய நாடுகளில் பரவி வருகிறது.கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கனடா சுகாதார முகமை தெரிவித்துள்ளது.
அவர்களிடம் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்வாமுனே என்ற தடுப்பூசிகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.