சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் - போக்சோ சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அடுத்துள்ள தெற்கு பாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.
இவரும் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகன் கார்த்திக்(19) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், கார்த்திக் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சிறுமியை வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கார்த்திக் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.