கிட்னியில் இருந்த 156 கற்கள் - 3 மணி நேரம் போராடி அகற்றிய மருத்துவர்கள்

hydrabad kidneystonesremoved
By Petchi Avudaiappan Dec 16, 2021 10:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளி ஒருவரின் கிட்னியில் இருந்த 156 கற்களை அகற்றி சாதனைப் படைத்துள்ளனர். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பசவராஜ் என்ற 50 வயது முதியவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அடி வயிற்றில் வலி தீவிரமாக ஏற்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் சிறுநீரகத்தில் அதிக எண்ணிக்கையில் கற்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசவராஜூவுக்கு , எண்டோஸ்கோப்பி மற்றும் லேப்ரோஸ்கோப்பி முறையை பயன்படுத்தி, 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் முடிவில் மருத்துவர்கள் வெற்றிகரமாக 156 கற்களை வெளியே எடுத்தனர். இந்த நடைமுறையைப் பயன்படுத்தி நம் நாட்டில் ஒரு நோயாளியிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்பட்டது இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.