15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம் - அதிர்ச்சியூட்டும் காட்சிகள்!
கலவரத்தால் சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோடினர்.
வெடித்த வன்முறை
நேபாளத்தில் இன்ஸ்டா, ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு கடந்த 4ஆம் தேதி உத்தரவிட்டது.
தொடர்ந்து 26 சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் மக்களும், குறிப்பாக இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இளைஞர்கள் நேபாள அரசில் ஊழல் மிகுந்துள்ளதாகவும், கூறி அரசுக்கு எதிராக போராடினர்.
கைதிகள் தப்பியோட்டம்
அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. நாடாளுமன்றம், பிரதமரின் வீடு, ஜனாதிபதி அலுவலகம், சுப்ரீம் கோர்ட்டு என ஏராளமான அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கலவரத்தால் நேபாளத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோடினர். அதில் போலீசாருடன் ஏற்பட்ட மோதல்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கைதிகளை உடனடியாக தேடிப்பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.