பிரபல தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை - தீவிர விசாரணை

Tamil nadu Crime
By Sumathi Jan 24, 2023 04:55 AM GMT
Report

தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் 

திருச்சி திருவெறும்பூர் ஐஏஎஸ் காலனியைச் சேர்ந்தவர் நேதாஜி(65). பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், தனது 3 சகோதரர்களின் குடும்பங்களுடன் இணைந்து கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார். இவரது சகோதரர் தேவேந்திரன் மகனுக்கு திருச்சியிலுள்ள ஒரு ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

பிரபல தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை - தீவிர விசாரணை | 150 Pounds Of Jewellery Stolen Trichy

இதனால் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்திலுள்ள அனைவரும் அந்த விழாவுக்காக ஓட்டலுக்குச் சென்றுவிட்டனர். இதையறிந்த மர்ம கும்பல், நேதாஜியின் வீட்டுக்கு வந்து முன்புற இரும்புக் கதவு, அதைத்தொடர்ந்து இருந்த மரக்கதவு ஆகியவற்றில் இருந்த பூட்டுகளை உடைத்துவிட்டு உள்ளே புகுந்துள்ளனர்.

 நகை கொள்ளை

பின்னர் அங்குள்ள அறைகளில் பீரோ உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் புகாரளித்தனர். மேலும், இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் கூறும்போது,

‘‘நேதாஜி வீட்டில் இருந்த 150 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்கள் திருடு போனது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரிப்பதற்காக 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால், போலீஸார் தினமும் 3 முறை வீட்டுக்கு வந்து பார்வையிடுவார்கள். இனியாவது பொதுமக்கள் இதை கடைப்பிடித்து போலீஸுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும்’’ எனக் கூறியுள்ளார்.