நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டி - இரட்டை சதம் அடித்து சுப்மன் கில் சாதனை!

Cricket Indian Cricket Team Shubman Gill
By Nandhini Jan 18, 2023 11:59 AM GMT
Report

இன்று நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டி

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மைதானத்தில் இரு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசி வருகிறது.

150-by-shubman-gill-in-just-122-balls

இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்

இந்நிலையில், நடைபெற்று வரும் இப்போட்டியில், வெறும் 122 பந்துகளில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் 150 ரன்களை எடுத்து இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

தற்போது இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சுப்மன் கில்லை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.