15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக சீரழித்து கர்ப்பமாக்கிய தாய்மாமன் - போலீசார் தேடுதல் வேட்டை
15 வயது சிறுமியை ஏழு மாத கர்ப்பமாக்கிய மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 15 வயது சிறுமி தாத்தா பாட்டி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாமா திருமாவளவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனதை தொடர்ந்து திருமாவளவன் அந்த சிறுமியை அழைத்துச் சென்று அருகில் உள்ள கோவிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பம் ஆன நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற நிலையில் சிறுமி மற்றும் அவரது தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் திருமாவளவனை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.