‘ப்ளீஸ்... என்னை விட்டுவிடுங்க...’ 15 வயது சிறுமியை ஆபாச படமெடுத்து மிரட்டி வந்த இளைஞர் - அதிரடி காட்டிய போலீஸ்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சசிகுமார். இவரும், சேலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சந்தித்துக் கொண்டனர்.
அப்போது, சசிகுமார் செல்போன் நம்பரை அச்சிறுமிக்கு கொடுத்துள்ளார். சசிகுமாருடன் நட்புடன் அச்சிறுமி பழகி வந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இந்த காதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சசிகுமார், அச்சிறுமியை தனிமையில் சந்தித்துள்ளார். அப்போது, அச்சிறுமியை ஆபாசமாக படம் பிடித்துள்ளார் சசிகுமார்.
இதனையடுத்து, அச்சிறுமியிடம் ஆபாச படத்தை காண்பித்து அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
பணம் தரவில்லையென்றால், இந்த ஆபாச படத்தை இணையத்தில் விட்டுவிடுவேன் என்று அச்சிறுமியை பயமுறுத்தியுள்ளார். இதனால் பயந்துபோன அச்சிறுமி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை யாருக்கும் தெரியாமல் கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சசிகுமாரின் தொல்லை தாங்க முடியாத அச்சிறுமி பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் சசிகுமாரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட முதற் விசாரணையில், உண்மையை ஒப்புக்கொண்டதால், போக்சோ உள்பட 6 பிரிவின் கீழ் போலீசார் சசிகுமார் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.