15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கட்டாய திருமணம் - வாலிபர் மீது பரபரப்பு புகார்!
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கட்டாய திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் மனு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மகளிர் ஊர்நல அலுவலர் சாந்தா என்பவர் சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், சின்னூர் பகுதியை சேர்ந்த முத்து (20) என்பவர், கிள்ளையை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, வீட்டிற்கு அழைத்துச் சென்று கர்ப்பமாக்கியுள்ளார்.
வழக்குப்பதிவு
இதையடுத்து கடந்த 4.9.2023 அன்று, சிறுமியை சிதம்பரத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார்.
தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ளார். எனவே சிறுமியை கர்ப்பமாக்கி, கட்டாய திருமணம் செய்த முத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாந்தா புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் முத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.