6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவன் - திடுக்கிடும் சம்பவம்
சிறுவன், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்தியப் பிரதேசம், படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. தன்னுடன் கோவிலுக்கு வந்த மகள் திடீரென காணாமல் போனதாக தாய் போலீஸில் புகாரில் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
அப்போது, அந்த ஊரில் உள்ள பள்ளியில் சிறுமி வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்த விசாரணையில், சிறுமி கடைசியாக அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுடன் காணப்பட்டார் என தகவல் கிடைத்துள்ளது.
சிறுவன் கொடுமை
அதில், சிறுவனிடம் விசாரித்ததில், அடிக்கடி தனது செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளார். இந்த பழக்கத்திற்கு அடிமையாகி கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதனையடுத்து சிறுவனை போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், வேறு யாரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.