15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை! அதிர்ச்சி தகவல்!!
ஆவடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த ஒன்றாம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகள் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணையில் செங்குன்றத்தை சேர்ந்த வெங்கடேசன் என்கின்ற 32 வயதுடைய வெங்கடேசன் என்ற நபர் சிறுமியை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது .
இதையடுத்து வெங்கடேசனை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து நேற்று வெங்கடேசன் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்று, செங்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார் அவரை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அத்துடன் வெங்கடேசனை
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது