நெல்லை கல்குவாரி விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

M K Stalin Government of Tamil Nadu
By Swetha Subash May 17, 2022 07:43 AM GMT
Report

நெல்லை கல்குவாரியில் பாறைகள் இடுக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15 லட்சம் நிவாரணம் அறிவித்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் அள்ளும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 14-ந் தேதி இரவில் சுமார் 400 அடி ஆழம் கொண்ட இந்த கல்குவாரியில் கற்களை அள்ளும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

நெல்லை கல்குவாரி விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! | 15 Lakhs Financial Aid Nellai Quarry Accident

இந்த சம்பவத்தின் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செல்வகுமார்,ராஜேந்திரன்,செல்வம்,முருகன்,விஜய்,மற்றொரு முருகன், ஆகிய 6 பேர் பாளை இடிபாடுகளில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு விட்டிலாபுரம் முருகன்,விஜய்,செல்வம் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். இதன் பின் தமிழக அரசின் வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த்,கனிமம் மற்றும் சுரங்க இயக்குனர் நிர்மல்ராஜ், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து முதற்கட்டமாக 3 வீரர்கள் கயிறு மூலம் கல்குவாரியில் இறங்கி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.உடனே அவரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர்.

நெல்லை கல்குவாரி விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! | 15 Lakhs Financial Aid Nellai Quarry Accident

அப்போது திடீரென அடுத்தடுத்து பாறைகள் சரிந்து விழுந்தது.இதனால் மீட்பு குழுவினர் 2 மணி அளவில் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு மேலே ஏறினார்கள். 

மேலும், கல்குவாரியில் இருந்து 4-வது நபராக மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளியான முருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த முருகன் மற்றும் செல்வன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். மேலும் அவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் சார்பில் ரூ. 5 வழங்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.