வலியால் கதறிய பெண் - கருப்பையில் இருந்த 15கிலோ கட்டி!

Madhya Pradesh
By Sumathi Aug 10, 2023 04:34 AM GMT
Report

பெண்ணின் கருப்பையில் இருந்த 15 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

15 கிலோ கட்டி

மத்தியப் பிரதேசம், அஷ்டா என்கிற நகரத்தைச் சேர்ந்த பெண் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து, இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் என்கிற மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்துள்ளார்.

வலியால் கதறிய பெண் - கருப்பையில் இருந்த 15கிலோ கட்டி! | 15 Kg Tumour In Woman Stomach

அதில், கருப்பையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அது வெடிக்கும் நிலையில் இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டார்.

மருத்துவர்கள் சாதனை

அதனையடுத்து, சுமார் 12 மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. வயிற்றில் இருந்து 15 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.

முன்னதாக பெண்ணின் எடை 49 கிலோ. 15 கிலோ எடை கொண்ட கட்டியை சுமந்துள்ளார். தற்போது அந்தப் பெண் நலமாக உள்ளார்.

இது மிகப்பெரிய சாதனை என்று மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதூரியா மற்றும் துணைத் தலைவர் மயங்க்ராஜ் சிங் பதூரியா ஆகியோர் மருத்துவர்களின் முயற்சியைப் பாராட்டினர்.