"உக்ரைனை விட்டு 17000 இந்தியர்கள் வெளியேறினர் ; பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் உடனடியாக வழங்கப்படும்" - வெளியுறவுத்துறை
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக நாடு திரும்ப, மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, போலாந்து, ஹங்கேரி நாடுகளின் எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

இந்திய தேசிய கொடிகளை உயர்த்தி, அச்சமின்றி எல்லையை நோக்கிச் செல்லுமாறு குடிமக்களை இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் இந்தியாவின் மீட்புப் பணியை உலகமே வியப்புடன் உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேறி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
எல்லை நகரங்களில் தஞ்சமடைந்துள்ள 17,000 இந்தியர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#WATCH | We now estimate that nearly 17,000 Indian nationals have left Ukraine borders since our advisories were issued in the last week of January: Arindam Bagchi, MEA spokesperson pic.twitter.com/6Vf0jI3X5X
— ANI (@ANI) March 2, 2022
இதுவரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானம் மூலம் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகவும்,
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் எல்லையிலேயே உடனடியாக பாஸ்போர்ட் வழங்கப்படும் எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.