15 மாவட்டங்களில் மிரட்ட போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Chennai
Department of Meteorology
By Thahir
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் இந்தநேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை மறுநாள் 10ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் சென்னை உட்பட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.