நாதக கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாதக கட்சியைச் சேர்ந்த கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றக் காவல்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் கார்த்திகா.
அவரையும், அவரது கணவர் முருகு சந்திரகுமாரையும் கோவையில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்கள் மீது 12க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், தென்காசியைச் சேர்ந்த இசை மதிவாணன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சஞ்சய் காந்தி, தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, ஷேக்பரீத், நகரப் பொறுப்பாளர் சூர்யா, மாணவர் பாசறை செயலாளர் கோகுல், சோழவந்தான் இளைஞர் பாசறை செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 9 பேரும் நேற்றிரவு தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.