தமிழக அரசுக்கு ரூ.15,419 கோடி அபராதம் - மத்திய அமைச்சர் அதிரடி..எதுக்குன்னு தெரியுமா..?
திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுசூழல் விதிகளை மீறியதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ. 15,419 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவலை மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
15,419 கோடி அபராதம்
தேசிய பசுமை தீர்ப்பாயம் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல்விதிகளை முறையாக பின்பற்றாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அபராதமாக ரூ.79,098 கோடி விதித்துள்ளது செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபாவில் இது தொடர்பான கேள்விக்கு தரவுகளுடன் எழுத்துப்பூர்வமாக பதிலை வெளியிட்டு மத்திய இணைய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே விளக்கமளித்தார்.
எதுக்குன்னு தெரியுமா..?
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய நீர் தரக் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,703 இடங்களில் உள்ள நீர்வளங்களின் நீரின் தரத்தை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்த அவர் விதிகளை மீறியதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.15,419 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு கால இடைவெளிகளில் மேற்பரப்பு, கடலோர மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றையும் கண்காணித்து வருவதாக கூறினார்.