தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா : சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உயர்வு. தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உள்ளது. இதுபோன்று இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 34,17,022 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், குறிப்பாக இன்று இறந்தும் எதும் பதிவாகவில்லை என்றும் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 38,025ஆக இருக்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது
தற்போது தமிழகத்தில் 711 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 14,843 பேரின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 6,54,77,909 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.