இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு
Ramanathapuram
By Thahir
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு
இமானுவேல் சேகரனின் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் வர உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 144 தடை உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்கள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.