வெடிக்கும் அக்னிபத் போராட்டம் : ஹரியானாவில் 144 தடை உத்தரவு அமல்

By Irumporai Jun 17, 2022 08:11 AM GMT
Report

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெடிக்கும் அக்னி பத் போராட்டம்

சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரெயில்களுக்கு தீ வைப்பு என இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருவதால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

குருகிராமில் 144 தடை உத்தரவு

வெடிக்கும் அக்னிபத் போராட்டம் : ஹரியானாவில் 144 தடை உத்தரவு  அமல் | 144 Crpc Issued To Restrict The Gathering Gurugram

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து ஹரியானாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.

வெடிக்கும் அக்னிபத் போராட்டம் : ஹரியானாவில் 144 தடை உத்தரவு  அமல் | 144 Crpc Issued To Restrict The Gathering Gurugram

அரியானாவில் போராட்டம் நடைபெறும் சில பகுதிகளில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அக்னிபத்துக்கு எதிரான போராட்டத்தால் டெல்லி ஐடிஐ மெட்ரோ நிலையத்தின் அனைத்து நுழைவு வாயிலும் மூடப்பட்டது. 

அக்னிபத்துக்கு எதிரான போராட்டத்தால் டெல்லி ஐடிஐ மெட்ரோ நிலையத்தின் அனைத்து நுழைவு வாயிலும் மூடப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் வெடித்தது போராட்டம்..!