24 மணி நேரத்தில் 1,400 முறை நிலநடுக்கம்; அதிர்ந்த நாடு - பீதியில் மக்கள்!

Earthquake Iceland World
By Jiyath Nov 11, 2023 06:45 PM GMT
Report

ஐஸ்லாந்தின் தென்மேற்கு தீபகற்பத்தில் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

தீவு நாடான ஐஸ்லாந்தில் நாட்டில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும்.

24 மணி நேரத்தில் 1,400 முறை நிலநடுக்கம்; அதிர்ந்த நாடு - பீதியில் மக்கள்! | 1400 Earthquakes In 24 Hours In Iceland

இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக 24 மணி நேரத்தில் 1400 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி ஐஸ்லாந்து அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை

நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து தென்மேற்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கிரிண்டாவிக் என்ற கிராமத்தில் சாலைகள் சேதம் அடைந்ததால் அந்த சாலைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

24 மணி நேரத்தில் 1,400 முறை நிலநடுக்கம்; அதிர்ந்த நாடு - பீதியில் மக்கள்! | 1400 Earthquakes In 24 Hours In Iceland

இந்த கிராமத்தில் சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர். மேலும், ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ப்ளூ லாகூன் நவம்பர் 16-ம் வரை மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது “பூமியில் சுமார் 5 கி.மீ. ஆழத்தில் பாறைக்குழம்பு மேற்பரப்பை நோக்கி நகரத் தொடங்கினால் அது எரிமலை வெடிப்புக்கு வழிவகுக்கும். எனினும் இந்த பாறைக்குழம்பு மேற்பரப்பை அடைந்து எரிமலையாக வெடிக்க சில நாட்கள் ஆகும்” என்றார்.