தமிழ்நாட்டில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 1,400 குழந்தைகள்
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா மரணங்களும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இரண்டாம் அலையில் இளம் வயதைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல குழந்தைகளும் தங்களுடைய பெற்றோர்களை இழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல மாநில அரசுகள் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளன.
இந்நிலையில் மாநிலம் தோறும் பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரம் குறித்து குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 1400 குழந்தைகள் கொரோனாவால் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள், யாராவது ஒருவரை இழந்த குழந்தைகள் இரண்டையும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் 50 குழந்தைகள் இரண்டு பெற்றோர்களையும் இழந்துள்ளனர்.