எந்த நேரத்திலும் தைவான் மீது போர் தொடுக்க தயார் : சீன அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு
தைவான் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயாராக உள்ளது என்று சீன அதிபர் ஜின்பிங் பேசியதாக வெளியாகியுள்ளா ஆடியோ பரபர்ப்பை ஏறப்டுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தைவான் நாட்டினை சீன அரசு தனது சொந்தமாக்க போரட்டி வருகிறது, அதே போல் தைவானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து தென்சீன கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தைவான் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயாராக உள்ளது என்று சீன அதிபர் ஜின்பிங் பேசும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

57 நிமிடங்கள் ஓடும் இந்த ஆடியோவை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி அரசின் மூத்த ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கசிய விட்டுள்ளனர் என்று யூடியூப் சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த ஆடியோவில், 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார் படுத்துமாறு சீன அதிபர் ஜின்பிங் பேசி உள்ளார். மேலும் ஆடியோவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி செயலாளர், துணை செயலாளர், கவர்னர், துணை கவர்னர் ஆகியோர் பேசியதும் இடம் பெற்றுள்ளது.
குவாட் மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன், தைவான் மீது படையெடுத்தால் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களம் இறங்கும் என்று நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ஆடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.