430 அடி உயர ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

accident iconparkaccident teendiesiniconpark 430fttall tyresampson amusementpark
By Swetha Subash Mar 26, 2022 08:34 AM GMT
Swetha Subash

Swetha Subash

in விபத்து
Report

430 அடி உயரம் கொண்ட ராட்சத ராட்டினத்தில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மத்திய ஃப்ளோரிடாவில் உள்ள ஐகான் (ICON) பொழுதுபோக்கு பூங்காவுக்கு மிசோரியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் டைர் சாம்ப்சன் தனது நண்பர்கள் குடும்பத்துடன் சென்றுள்ளான்.

430 அடி உயர ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை | 14 Yo Teen Dies From Falling Off Ride At Icon Park

அப்போது அங்கு 430 அடி உயரம் கொண்ட ராட்சத ராட்டினத்தில் சிறுவன் சவாரி செய்தபோது எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தான்.

படுகாயம் அடைந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது சிறுவன் சாம்ப்சன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

430 அடி உயர ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை | 14 Yo Teen Dies From Falling Off Ride At Icon Park

மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஐகான் பூங்காவின் இயக்குனர் ஜான் ஸ்டைன் பேசுகையில்,

“ராட்டினத்தில் இருந்து சிறுவன் விழுந்து பலியான சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். என்ன நடந்தது என்பதை அறிய எல்லா விசாரணைக்கும் நாங்கள் ஒத்துழைப்போம்” என தெரிவித்தார்.