பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை கொடூரம் - போலீசாரிடம் கதறிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்

father-arrest மகள் பாலியல்வன்கொடுமை sexually-abused 14-year-old-girl 14வயதுபெண் தந்தைகைது
By Nandhini Apr 15, 2022 10:59 AM GMT
Report

புழல், வினாயகபுரம், காஞ்சி நகரைச் சேர்ந்தவர் சையத் சர்பிராஸ் நவாஸ். இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில், தனது 14 வயது மகளிடம் நவாஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விஷயத்தை மகள், தாயிடம் கதறி அழுது கூறியுள்ளார். மகள் கூறியதைக் கேட்ட தாய், உடனே புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விரைந்து சென்று புகார் கொடுத்தார்

. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நவாஸை கைது செய்தனர். அவரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நவாஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல், தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நவாஸ் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை கொடூரம் - போலீசாரிடம் கதறிய மனைவி - அதிர்ச்சி சம்பவம் | 14 Year Old Girl Sexually Abused Father Arrest