14 வயது சிறுமியை சீரழித்த கொடூரம் - திருமணமான காதலன் உட்பட 5 பேர் வெறிச்செயல்!

Sexual harassment Child Abuse Crime Salem
By Sumathi May 01, 2023 04:50 AM GMT
Report

14 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

சேலத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவருக்கு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்த வினித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் சிறுமியை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

14 வயது சிறுமியை சீரழித்த கொடூரம் - திருமணமான காதலன் உட்பட 5 பேர் வெறிச்செயல்! | 14 Year Old Girl Gang Raped By 5 In Salem

அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உடனே சிறுமி இதுகுறித்து அவரது தந்தையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து புகாரளித்த நிலையில்,

5 பேர் கைது 

சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் வினித் என்கிற அசார், விக்னேஷ், சீனிவாசன், ஆகாஷ் மற்றும் அருண்குமார் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். அதனையடுத்த விசாரணையில்,

அசார் ஏற்கனவே திருமணம் ஆகி ஒன்றரை வயது குழந்தைக்கு தந்தையானதும், சிறுமியை நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.