ஓடும் பேருந்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பயங்கர சம்பவம்!
14 வயது சிறுமியை கடத்தி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான், தரம்ஷாலாவைச் சேர்ந்தவர் அனில் மேக்வால்(21). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒன்றரை ஆண்டுகளாக போதைப்பொருள் ஜூஸ் ஊற்றி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
மேலும், நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் எடுத்துள்ளார். அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி சிறுமியை ஓடும் பேருந்தில் 2 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பகீர் தகவல்
உடனே, இதனை பொறுத்துக்கொள்ளமுடியாத சிறுமி புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், சிறுமிக்கு 12 வயதாக இருக்கும் போதே அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தற்போது அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.