வாடகை வீட்டில் விபச்சாரம் - 16வயது சிறுமியை வைத்து ஸ்கெட்ச் போட்ட தம்பதி!
16வயது சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடத்திய தம்பதி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் தொழில்
புதுச்சேரி கோரிமேடு எல்லைக்குட்பட்ட மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விசாரணையில், கடலூரை சேர்ந்த பாலாஜியும், அவரது மனைவி உமாவும் வீட்டை வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில்,
16வயது சிறுமி மீட்பு
கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளி கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும் புரோக்கர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்திருக்கிறார்கள்.
வார இறுதி நாட்களில் தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வந்து சென்றிருக்கிறார்கள்.
அதனையடுத்து பாலாஜி, அவரது மனைவி உமா, வாடிக்கையாளரான புதுவையை சேர்ந்த பச்சையப்பன் உள்பட 27 மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, 16 பேரை கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் உமா உள்பட 8 பேரை தேடும் வேட்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.