மேக வெடிப்பு.. திடீர் வெள்ளத்தில் சிக்கிய பலர் மாயம் - 14 பேர் உயிரிழப்பு!

India Death
By Vinothini Oct 05, 2023 10:56 AM GMT
Report

திடீர் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளம்

சிக்கிம் மாநிலம், வடக்கு பகுதியில் உள்ள லோனக் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ள கரைபுரண்டு ஓடியது.

சிக்கிம் வெள்ளப்பெருக்கு

இதில் அந்த மாநிலத்தில் 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கால் 23 ராணுவ வீரர்கள் நேற்று மாயமாகினர்.

உயிரிழப்பு

இந்நிலையில், அம்மாநிலத்தில் மீட்பு பணி தீவிரமடைந்தது. அதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 23 ராணுவ வீரர்களில் ஒரு ராணுவ வீரர் இன்று அதிகாலை மீட்கப்பட்டார், மற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்பொழுது வெள்ளம் பாய்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்தினர்.

ரூ.1.15 கோடி வந்த எலக்ட்ரிக் பில்.. அதிர்ச்சியில் திகைத்த நகைக் கடைக்காரர்!

ரூ.1.15 கோடி வந்த எலக்ட்ரிக் பில்.. அதிர்ச்சியில் திகைத்த நகைக் கடைக்காரர்!

வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டவர்களில் 102 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.