‘ரிலீஸ் ஆகி ஒருநாள் தான் ஆச்சு’ - ரசிகர்களால் வலிமைக்கு ஏற்பட்ட சோகம்

valimai VALIMAIConquersBoxOffice
By Petchi Avudaiappan Feb 25, 2022 05:12 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

வலிமை திரைப்படத்தின் நீளம் குறைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.  

தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர் எச்.வினோத், நடிகர் அஜித்,யுவன் சங்கர் ராஜா கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ள வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலில் சாதனைப் படைத்தது. 

ஆனால் இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் சரியான விருந்தாக அமையவில்லை என இணையத்தில் கருத்து பரவ, பலரும் இதனை ஆதரித்தனர். குறிப்பாக சென்டிமெண்ட் சீன்கள், படம் ஆரம்பித்தவுடன் சென்னை குறித்த பார்வை போன்ற பல சீன்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைந்ததாக விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக்கூடிய வலிமை திரைப்படத்தின் நீளம் 14 நிமிடங்கள் குறைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ‘ரிலீஸ் ஆகி ஒருநாள் தான் ஆச்சு.. அதற்குள் வலிமை படத்திற்கு சோதனையா என ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.