14 மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட தடை - எங்கு எங்கு தெரியுமா?

14 district Haryana diwali celebration restrict
By Anupriyamkumaresan Oct 31, 2021 12:57 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

ஹரியானா மாநிலத்தில் 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லியை ஒட்டியுள்ள பிவானி, சர்கி தத்ரி, பரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், ரோதக், பானிபட், கர்னல், நுக், பல்வல், மகேந்திரகர்க், சோனிபட் மற்றும் ரேவரி ஆகிய 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

14 மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட தடை - எங்கு எங்கு தெரியுமா? | 14 Districts Diwali Celebration Blocked In Haryana

கடந்த மாதம் டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை தொடர்ந்து, அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து அரியானா மாநிலத்தில் இந்த 14 மாவட்டங்களுக்கும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளுக்கு கூட பசுமை பட்டாசுகளை தான் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்பட பகுதிகளில் மட்டும் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.