முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினம் - கண்ணீரில் தமிழர்கள்

Mahinda Rajapaksa Mullivaikal Remembrance Day Sri Lanka Velupillai Prabhakaran
By Petchi Avudaiappan May 18, 2022 12:28 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டதின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

உலகம் தோன்றிய எத்தனையோ மோதல்கள், போர்கள் நாம் கண்டிருப்போம்,கேட்டிருப்போம். ஆனால் நம்மை சுற்றி ஒரு சம்பவம் நடைபெறும் போது அதன் வலி என்னவென்று தெரியும். அப்படியான இந்த மே 18 ஆம் தேதி நிச்சயம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மறக்க முடியாத ஒரு நாளாக உள்ளது. 

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினம் - கண்ணீரில் தமிழர்கள் | 13Th Anniversary Of The Mullivaikkal Memorial Day

தனித் தமிழ் ஈழம் என்ற முழக்கத்தோடு உலக நாடுகளின் உதவியோடு இலங்கை அரசின் கண்ணில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையிலான படையினர் விரலை விட்டு ஆட்டினர். எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் தன்னை நம்பிய மக்களுக்காக தன்னுயிரை நீத்தார் பிரபாகரன். 

அப்படியான விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு இடம் தான் முள்ளிவாய்க்கால். இங்கு தான் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஈழ தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இலங்கை ராணுவம் ஈவு இரக்கம் ஏதுமின்றி ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது. இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயினர். பல பேர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்தனர். 

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினம் - கண்ணீரில் தமிழர்கள் | 13Th Anniversary Of The Mullivaikkal Memorial Day

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி இந்த போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. உலகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு தமிழர் மனதிலும் ஆறாத வடுவாக மாறியது இலங்கை தமிழர்களின் மரணமும், தனித்தமிழ் ஈழத்திற்கான முழக்கமும். ஈழத்தமிழர்கள் மீது இப்படி ஒரு கொலைவெறி தாக்குதலை நடத்தியது தற்போது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் இதே மகிந்த ராஜபக்ச தான். 

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினம் - கண்ணீரில் தமிழர்கள் | 13Th Anniversary Of The Mullivaikkal Memorial Day

கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை நீதி வழங்கப்படாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை அனுசரிக்கப்படுகிறது. இவர்களுக்கு தமிழ் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.