தனது 134-வது மாரத்தானை பாட்னாவில் நிறைவு செய்து அசத்தினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பாட்னாவில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், 21.1 கி.மீ. தூரத்தை 2.30 மணி நேரத்தில் கடந்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் மாரத்தானில் ஓடுகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் லண்டன் மெய்நிகர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 8 நிமிடங்களில் கடந்து நிறைவு செய்து வென்றார். இதற்காக அவருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.