ஒரிசாவில் 1300 ஆண்டுகள் பழமையான புத்த கோபுரம் கண்டுபிடிப்பு... - மகிழ்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்...!

Viral Photos Odisha
By Nandhini Feb 28, 2023 12:08 PM GMT
Report

ஜாஜ்பூரில் 1300 ஆண்டுகள் பழமையான புத்த கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

1300 ஆண்டுகள் பழமையான புத்த கோபுரம் கண்டுபிடிப்பு

ஸ்தூபி ஜாஜ்பூரில் உள்ள கோண்டலைட் கல் சுரங்க தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஒரிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்க தளத்தில், பௌமகரா வம்சத்தின் 1300 ஆண்டுகள் பழமையான புத்த கூரான கோபுரத்தை இந்திய தொல்லியல் துறை (ASI) கண்டுபிடித்துள்ளனர். இந்த கோபுரம் சுமார் 4.5 மீட்டர் உயரம் கொண்டுள்ளது.

ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சுகுவாபாடா குக்கிராமத்தில் உள்ள பரபாடியில் உள்ள கண்டோலைட் சுரங்க தளத்தில் இந்த கோபுரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட மடத்தை பாதுகாக்க ஏஎஸ்ஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த கோபுரத்தை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுரங்க நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. புகழ்பெற்ற லலித்கிரி புத்த மடாலய வளாகம், ASI-யால் பாதுகாக்கப்பட்ட தளம் அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

1300-yrs-old-buddhist-stupa-discovered-jajpur