6 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த 13 வயது சிறுமி
இமாச்சலப் பிரதேசம், சோலன் மாவட்டத்தில் உள்ள ரபோனைச் சேர்ந்த 13 வயது சிறுமி திங்களன்று PGIMER-இல் தனது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம் மற்றும் கருவிழிகள் ஆகியவற்றின் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் ஆறு நோயாளிகளுக்கு புதிய வாழ்வைளித்துள்ளார்.
விபத்தின்போது தலையில் பலத்த காயம் அடைந்த 13 வயது சிறுமி முஸ்கான் குரோவர், PGI-இல் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஏப்ரல் 2-ந் தேதியன்று மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
சிறுமியின் துயர மரணத்தை வீணாக விடாமல், உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் முஸ்கானின் பெற்றோர்களிடம் விஷயத்தை எழுப்பியபோது உறுப்பு தானம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.
தனது மகளைப் பற்றி தாயார் சம்ரிதி குரோவர் கூறுகையில், “கடவுள் எங்களுக்குக் கொடுத்த மிகப் பெரிய பரிசு அவள். உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டது கடினமான முடிவு தான் ஆனால் எப்படியோ, இது நாம் செய்ய வேண்டிய ஒன்று போல் உணர்ந்தோம், மேலும் 'இதைச் செய்' என்று முஸ்கான் கூறுவது போலவே நாங்கள் உணர்கிறோம்.” என தெரிவித்தார்.
இது குறித்து PGIMER-இன் இயக்குனரும் பேராசிரியருமான சுர்ஜித் சிங் கூறுகையில்,
“சொந்தக் குழந்தையின் மரணத்திற்கு மத்தியில், சில அந்நியர்களின் உயிரைக் காப்பாற்ற நினைப்பது எதிர்ப்பார்பிற்கும் அப்பால்பட்டது, கற்பனை செய்ய முடியாதது. ஆனால் முஸ்கானின் குடும்பத்தினர் தங்கள் சொந்த மகள் இறந்ததையும் பொருட்படுத்தாமல் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முன்மாதிரியான துணிச்சலைக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
நேர நெருக்கடிக்கு மத்தியில் PGI குழு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய இயக்குனர், “மூளை இறப்பு சான்றிதழ் குழு முதல் மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள், சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மற்றும் குறிப்பாக உடலை சிறந்த நிலையில் பராமரிக்கும் தீவிர சிகிச்சை நிபுணர்கள்,
உறுப்புகளின் உகந்த பயன்பாட்டிற்காகவும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரை தங்கள் திறமை மற்றும் மற்ற மருத்துவமனைகளுடன் சேர்ந்து எடுத்த கூட்டு முயற்சி என விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றும் செயல்பாட்டில் ஈடுபட்ட ஒட்டுமொத்த குழுவின் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது.” என கூறினார்.
“ PGI, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் ரோட்டோவுக்கான (வடக்கு) நோடல் அதிகாரியும் பேராசிரியருமான விபின் கவுஷல் கூறுகையில்,
“ சிறுமியின் இதயத்திற்கு பொருந்தக்கூடிய பெறுநர் PGI-இல் இல்லாததால், நோட்டோ-வை(தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) உடனடியாக தொடர்புகொண்டு மற்ற மாற்று மருத்துவமனைகளில் உள்ள விருப்பங்களை ஆராய கேட்டுக்கொள்ளப்பட்டது.
சிறுமியின் இதயத்திற்கு பொருந்திய பெறுநர்கள் இறுதியாக, சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நோட்டோ மூலம் இதயம் ஒதுக்கப்பட்டது.
மேலும், சண்டிகர் மற்றும் மொஹாலி போக்குவரத்து காவல் துறைகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் தீவிர ஒத்துழைப்புடன் மதியம் 2.30 மணிக்கு அனுப்பப்பட்ட அறுவடை செய்யப்பட்ட இதயம் மதியம் 3.25 மணியளவில் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, ஏப்ரல் 3-ம் தேதி இரவு 8.27 மணிக்கு சென்றடைந்தது” என தெரிவித்தார்.
நெப்ராலஜி மற்றும் ஹெபடாலஜி துறைகளின் அசாத்திய முயற்சியால் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் ஒருங்கிணைந்த கணையம் மற்றும் சிறுநீரகத்திற்கான மூன்று பெறுநர்கள் அடையாளம் காணப்பட்டது.
மேலும் அனைத்து உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சைகளும் ஏப்ரல் 4-ந் தேதி அதிகாலையில் நிறைவேற்றப்பட்டன. அறுவடை செய்யப்பட்ட கருவிழிகள், இரண்டு கண் பார்வையற்ற நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.