10 அவதாரம் வெளியாகி இன்றோடு 13 வருஷம் ஆச்சு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த கமல்

10 years of dhasavatharam
By Petchi Avudaiappan Jun 14, 2021 01:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் கமல், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான தசாவதாரம் படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கமல், அசின், மல்லிகா ஷெராவத், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் "தசாவதாரம்".

இந்த திரைப்படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்திருந்தார். கி.பி.12 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் கதை 21 ஆம் நூற்றாண்டில் முடிவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தசாவதாரம் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆவதை நினைவு கூர்ந்துள்ளார். படத்தின் மேம்பாட்டிற்காக பணியாற்றிய படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.