பைக் பந்தயத்தில் போட்டியாளராக பங்கேற்ற 13 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு
பைக் பந்தயத்தில் பங்கேற்ற 13 வயது பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற இந்திய தேசிய பைக் பந்தய சாம்பியன்ஷிப்பின் 3வது சுற்றில் பெங்களூரைச் ஷ்ரேயாஸ் ஹரீஷ் என்ற 13 வயது மாணவர் பங்கேற்றார்.
இந்த பந்தயத்தில் ஹரீஷ் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கினார். அப்போது எதிர்பாரதவிதமாக தலைக்கவசம் கழன்று விழுந்ததில் தலையில் பலமாக அடிப்பட்டது.
இதையடுத்து ஹரீஷ் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அப்போது அவர் கொண்டும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
பந்தயங்கள் ரத்து
இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பந்தயங்களையும் ரத்து செய்தது.
கடந்த மாதம் தனது 13வது பிறந்த நாளை கொண்டிடாடிய 8 ஆம் வகுப்பு மாணவரான ஷ்ரேயாஸ் ஹரீஷ் தேசிய அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.