பாலியல் வன்கொடுமை; 13 வயது சிறுமிக்கு நடந்த அவலம் - 3 இளைஞர்கள் வெறிச்செயல்!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 வயது சிறுமி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள இரு கிராமத்தை சேர்ந்தவர் இந்த 13 வயது சிறுமி. இவர் கடந்த 2022ம் ஆண்டு இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்போது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த இளைஞர்.
இந்த விஷயம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர அந்த இளைஞரிடம் பேசுவதை சிறுமி தவிர்த்து இருக்கிறார். அடுத்த சில மாதங்கள் கழித்து சிறுமி மற்றொரு நபரை காதலித்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் சிறுமி இந்த ஊரில் இருந்தால் சரியாக இருக்காது என அறிந்த அவரது பெற்றோர் அவரை வெளியூரில் தங்க வைத்து படிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த சிறுமியை மற்றொரு இளைஞர் ஒருவர் கட்டாயப்படுத்தி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.
இளைஞர்கள் வெறிச்செயல்
அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் மாதத்தில் மற்றொரு நபர் அச்சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக தகவல் தெரிவிக்கிறது. இவை அனைத்தயும் அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சிறுமியின் நலனை கருத்தி சைல்டு லைன் அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் விசாரனை நடத்தி சிறுமியை மீட்டு குழந்தை நல காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். இதன் பிறகு, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மகேஸ்வரன் (23), லட்சுமணன் (23), வெற்றிவேல் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் பாலியல் தொந்தரவு அளித்த மாதேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.