13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 48 வயது நபர் - வெளியான அதிர்ச்சி சம்பவம்
நீலகிரி மாவட்டம், பந்தலூரைச் சேர்ந்தவர் அத்துப்பா (48). இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அச்சிறுமி யாரிடம் சொன்னால் இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து சில நாட்களாக அச்சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அச்சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அச்சிறுமியை சோதனை செய்த மருத்துவர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அச்சிறுமி அத்துப்பா தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர்கள் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரை பதிவு செய்த போலீசார் அத்துப்பாவை தேடினர். தன்னை போலீசார் தேடுவதை அறிந்த அத்துப்பா தலைமறைவார். போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் அத்துப்பா கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கேரளாவிற்கு விரைந்து சென்ற போலீசார் அத்துப்பாவை கைது செய்து, போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.